மரபு கட்டுமானம்
கான்கிரீட் காடுகள் தாக்கமும் அழிவும்
Eco friendly sustainable natural buildings, green energy, zero waste & compost
மரபு கட்டுமானம் என்பது சூழல் சார்ந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு உயிர்புடன் ஒரு கட்டுமானத்தை வடிவமைத்து தலைமுறை கொண்டாடும் மரபு வீடாக கட்ட வேண்டும்.
லாப நோக்கம்
இன்றைய சூழலில் அனைத்தும் பணமாகவும் பொருளாகவும் பார்க்கும் மனவோட்டத்தில் கட்டுமானத்தையும் இன்று வணிக நோக்கத்துடன் அனுகுகிறார்கள். அதை பயன்படுத்தி சிலர் கட்டுமானப் பொருட்களில் லாபம் அடைகின்றனர்.
வளங்கள் அழிப்பு
சிமென்ட், ஜல்லி, ஆற்று மணல், கம்பிகள் போன்ற உயிரற்ற ஒரு கட்டிடத்தை உயிர்வால அமைப்பது எந்த வகையில் உத்தமம்?
இது போன்ற ஐரோப்பிய கட்டிட கலை நமது நாட்டு தட்பவெப்ப சூழலுக்கு ஒத்துவராத ஒன்று. இது போன்ற கட்டிடத்தால் நுறையீரல் தொற்றும் ஏற்படும்.
வீண் விரயம்
ஒருவர் 20ஆண்டுகாலம் லோன் வாங்கி ஒரு கான்கிரீட் வீட்டை வடிவமைத்தால் அந்த லோன் முடிவடயும் போது வீடும் சேதமாகிவிடும்.
ஒரு தலைமுறை கூட தாக்குபிடிக்காத இந்த கட்டிடம் எங்கே? 3-4 தலைமுறை தாங்கியும் கம்பீரமாக இருக்கும் நமது மரபு கட்டிடம் எங்கே…
உடல்நலக்குறைவு
ஆரம்பத்தில் மண் தரை இருக்கும்போது கூட ஆரோக்கியமாக தான் இருந்தோம். ஆனால் தற்போது இருக்கும் சிமென்ட் தரை அதன்பின் ரெட் ஆக்சைட் தரை பின் மொசைக் பின் கிரானைட் பின் டைல்ஸ் என மாற்றி அமைத்து மூட்டு வலி வந்தது தான் மிச்சம். வளங்கள் அழிப்பும் ஏராளம்.
இரும்பு-மூங்கில்
ஒரு டன் இரும்பு கம்பிகள் உற்பத்தி ஆக 2டன் கரியமிலவாயுவை வெளியிடுகிறது. அதுவே ஒரு டன் மூங்கில் உற்பத்தியாக 2டன் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயுர்வளியை தந்தும் பயன் தருகிறது. அத்துடன் மூங்கில் கொண்டு கட்டபடும் வீட்டை இடி தாக்காது என்பர்.
ஐந்திணை
குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை மருதம் என ஐந்திணைக்கும் வெவ்வேறு கட்டமைப்புகள் உள்ளன. கட்டுமான பொருட்கள் அந்த பகுதியை சார்ந்தவையாக இருக்க வேண்டும். அந்த சூழல் மண்ணை பயன்படுத்துவது சிறந்தது.
உயிர் கட்டுமானம்
மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம். உயிருள்ள வீட்டை கட்டி உயிர்ப்புடன் வாழுங்கள்.
மற்ற திட்டமைப்பு
சூழல் சார்ந்த கட்டுமானத்தை செலவில்லாமல் சிக்கனமாக வடிவமைக்கவும். இயற்கை சார்ந்த பொருட்கள், இயற்கை சாய வண்ணப்பூச்சு என ரம்யமாக உருவாக்குங்கள். அத்துடன் சூரியசக்தி ஆற்றல், காற்றாழை பயன்படுத்தி மின்சார தேவையை பூர்த்தி செய்யுங்கள். மழை நீர் சேகரிப்பு அமைத்துக் கொள்ளுங்கள் அத்துடன் பயன்படுத்தும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த தேவையான திட்டத்தையும் செயல்படுத்துங்கள். சாண எரிவாயு களன் அமைத்து பயன்படுத்துங்கள். அனைத்து கழிவுகளையும் உரமாக மாற்றுங்கள்.
இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
வலைதளங்கள்
மரபு கட்டுமானம் சம்பந்தமான விவரங்களுக்கு, பயிற்சிக்கு இந்த வலைதளங்களை பயன்படுத்தவும்…
www.habitattechnologygroup.org
www.naturalhomes.org
www.thannal.com
www.earth-auroville.com
காணொளி
அண்ணன் செந்தமிழன் அவர்களின் மரபு கட்டுமானம் சம்பந்தமான காணொளி…
சென்னையில் திரு சுரேஷ் அவர்கள் அவரது வீட்டில் சூரியசக்தி, எரிவாயுகளன், மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவை உரமாக பயன்படுத்துகிறார். அதை பற்றிய காணொளி…
முகநூல் பக்கம்
மரபு கட்டிடக் கலை சார்ந்த முகநூல் பக்கம்…
https://www.facebook.com/kalloviyam/
https://www.facebook.com/naturalbuildersofindia/
https://www.facebook.com/mudandwood/
மற்ற கட்டுரைகள்
குறைந்த முதலீடு கட்டுமானம் மற்றும் சூழல் சார்ந்த கட்டுமானம் பற்றிய கட்டுரைகள்…
http://www.instructables.com/id/How-to-Build-Dirt-Cheap-Houses/
https://yourstory.com/2018/03/tradition-ecofriendly-startups-sustainable-houses/
மரபு வீட்டில் கணவன் மனைவி தங்களுக்கான உணவுக் கட்டை உருவாக்கி இயற்கையுடன் வாழ்கிறார்கள்…
This Couple’s Quest for Natural Living Has Resulted in a Mini Forest and an Energy Efficient Home
தொகுப்பு:
மு.சந்தோஃச் குமார்
அலைபேசி எண்: 9965483828
மின்னஞ்சல்: spacemania3@gmail.com
முகநூல்:
https://www.facebook.com/profile.php?id=100000481695279
வலைதளம்: www.agriculturalist.org