பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம்.
3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை வேளாண் பயிற்சி பறவையிடம்( நன்றி பறவை பாலா அண்ணா) முடித்தப்பின் தற்போது பனை பயணம் மேற்கொண்டு சிறப்பாக பயணிக்கிறார்.
பனை சார்ந்த மரபு தொழிலை கற்றுக்கொண்டு அதை பலருக்கும் பயிற்றுவித்தும் ஊக்கப்படுத்தியும் பனை பொருட்களை செய்தும் கொடுக்கிறார்.
இதற்காகவே பல இன்னல்களையும் குடும்ப சுமையையும் தாங்கி மரபை மீட்க பல துன்பங்களை கடந்து வாழ்வை நகர்த்துகிறார்.
வேளாண்மை சார்ந்த புரிதலுக்கு பண்ணை வடிவமைப்புக்கு, பனை சார்ந்த பொருட்கள் தேவைக்கு, பனை அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்த, பலர் பயிற்சி எடுத்துக்கொள்ள அன்பரை அழைக்கவும். இயற்கை அங்காடிகள் இவரை தொடர்பு கொண்டு பனை பொருட்களை சந்தை படுத்தலாம்.
இவரது கைவண்ணத்தில் பல அரிய பொருட்களை உருவாக்கி உள்ளார். அவை இதய வடிவ பெட்டி, ஒற்றை ஓலை உருளை வடிவம், தாமரை, முப்பரிமான முக்கோண வடிவம், தொப்பி, மூன்று முக்கு பெட்டி, வளையல், சாவிகொத்து, ஒன்பதரை பெட்டி – ஐந்தரை பெட்டி, பம்பரம், பூங்கொத்துக்கள், பனைமனிதன், விளையாட்டு பொருட்கள், படிகள் (அளவுகோல்), கூடை, குடுவை பெட்டி, மான், கின்னம், குவளை, குடுவை, காற்று இசை கருவி, குழந்தைகளுக்கான பென்சில் பெட்டி, குழந்தைகளுக்கான கைப்பை, கருப்பட்டி பெட்டி, கிளுப்பு, என பலவகையான பயன்பாட்டு பொருளை கற்றுக்கொண்டு செய்து வருகிறார் இதற்காக பல மாதங்கள் அப்பணித்து கற்றுக்கொண்டதுடன் பலருக்கும் கற்றும் தருகிறார்.
இதுபோல் அற்புதமான புரிதலில் இருபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் பெரிய தேவையையும் இல்லாமல் சிறு நுகர்வு வாழ்வியலையே வாழ்கிறார்கள். இன்னும் இவரை நேரில் சந்திக்கவில்லை அதற்கான வாய்ப்பும் கிட்டவில்லை. விரைவில் சந்திக்க வேண்டும்.
வனோத் தொடர்புக்கு:
9626182703(whatsapp)
9751155282
அவரது காணொளி தொகுப்பு
இவரது முகநூல் பக்கம்
https://www.facebook.com/kovilvino
இவரது முகநூலில் பனை பற்றிய தகவல்கள் நிறைய பகிர்ந்துள்ளார். அவரது கைவினை பொருட்களை பார்க்கலாம்.